உள்ளூர் லீக் மூலம் திறமையான வீரர்கள் அறியப்படுகிறார்கள்: கிறிஸ் கெய்ல்

உயர்தர பிராந்திய போட்டிகளே நவீன கிரிக்கெட் வளர்ச்சியின் முதுகெலும்பு.
Chris Gayle
கிறிஸ் கெய்ல்
Published on

வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் நட்சத்திர வீரர் கிறிஸ்கெய்ல் கொச்சி புளூ டைகர்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். மேலும் அந்த அணியின் வழிகாட்டியுமாக செயல்படும் அவர், கேரளா வந்து தனது அணியினரை ஊக்கப்படுத்தினார்.

பின்னர் கிறிஸ் கெய்ல் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு முக்கிய தளமாக கேரள கிரிக்கெட் லீக் உள்ளது. உயர்தர பிராந்திய போட்டிகளே நவீன கிரிக்கெட் வளர்ச்சியின் முதுகெலும்பு.

மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த உள்ளூர் லீக்குகளின் மூலம்தான் சர்வதேச நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டு, வளர்க்கப்படுகிறார்கள். வருங்கால நட்சத்திரங்களுக்கான ஒரு ஏவுதளம்தான் உள்ளூர் போட்டிகள். ஒரு வழிகாட்டியாக எனது பங்கை நான் முழுமையாக அனுபவித்து மகிழ்கிறேன்.

சவாலான காலக்கட்டம்

சமீப காலங்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி சவாலான காலக்கட்டத்தை எதிர் கொண்டுள்ளது. எங்கள் அணி மேலும் வலுவாக மீண்டு வந்து, உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த அணியாக தங்களது இடத்தை மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கிறிஸ் கெய்ல் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com