ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: 3வது நாள் முடிவில் கர்நாடகா 220/5

ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 584 ரன்களில் ஆல் அவுட்டானது. கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: 3வது நாள் முடிவில் கர்நாடகா 220/5
Published on

ஹூப்ளி:

ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார்.

கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.

மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com