சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.
rabada
Published on: 
Summary

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்தது. இதில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 600 விக்கெட் வீழ்த்திய 5-வது வீரர் என்ற சாதனையை ரபாடா படைத்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளைக் கடந்தும் ரபாடா சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயினின் சாதனையை ரபாடா முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 350 விக்கெட் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் ஆனார் ரபாடா.

ரபாடா 75 போட்டிகளில் 13,808 பந்துகளில் 350 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் டேல் ஸ்டெயின் 14,719 பந்துகளில் 350 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கடந்துள்ள ஷான் பொல்லக், டேல் ஸ்டெயின், மகாயா நிடினி, ஆலன் டொனால்டு வரிசையில் ககிசோ ரபாடாவும் இணைந்துள்ளார்.

X