டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 15,000 ரன் குவித்து ஜோஸ் பட்லர் உலக சாதனை

இந்தப் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.
jos butler
Published on
Summary

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லர் டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை பெற்றது.

நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

ஜோஸ் பட்லர் ரன் குவிப்பு

இந்தத் தொடரில் ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் 44 பந்தில் 80 ரன்னும், இரண்டாவது போட்டியில் 16 பந்தில் 30 ரன்னும் எடுத்து அசத்தினார்.

பட்லர் 15,000 ரன்

இந்நிலையில், இந்த சிறப்பான பேட்டிங் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லர் 15,000 ரன்களைக் கடந்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கெய்ரன் பொல்லார்டு 14,999 ரன்களுடன் இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

ஜாஸ் பட்லர்: 15,000 ரன் (528 போட்டிகள்)

கெய்ரன் பொல்லார்டு: 14,999 ரன் (754 போட்டிகள்)

அலெக்ஸ் ஹேல்ஸ்: 14,581 ரன் ( 537 போட்டிகள்)

கிறிஸ் கெயில்: 14,562 ரன் (463 போட்டிகள்)

டேவிட் வார்னர்: 14,284 ரன் (439 போட்டிகள்)

விராட் கோலி: 14,218 ரன் (430 போட்டிகள்)

ஜேம்ஸ் வின்ஸ்: 14,081 ரன் (501 போட்டிகள்)

சோயப் மாலிக்: 13,571 ரன்

குயிண்டன் டி காக்: 13,046 ரன்

பாப் டூ பிளசிஸ்: 12,782 ரன்

X

Maalai Malar
www.maalaimalar.com