சச்சின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
root, sachin
Published on: 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட் அரை சதமடித்து சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்​சன், ஜோஷ் டங்​ தலா 5 விக்கெட் வீழ்த்தினர்​.

அடுத்து ஆடிய இங்கிலாந்து இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நேற்று பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். ஜோ ரூட் தனது 167-வது டெஸ்ட் போட்டியின் 305-வது இன்னிங்சில் 680வது அரைசதத்தை எட்டினார்.

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 68 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com