அந்த பையனுக்கு பயம் இல்ல.. ஜெய்ஸ்வாலை புகழ்ந்த மேக்ஸ்வெல்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பலவீனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.ஷார்ட் பால், டிரைவ் சிறப்பாக விளையாடுகிறார்.
அந்த பையனுக்கு பயம் இல்ல.. ஜெய்ஸ்வாலை புகழ்ந்த மேக்ஸ்வெல்
Published on

இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் பலவீனங்கள் இருப்பதாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பலவீனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஷார்ட் பால், டிரைவ் சிறப்பாக விளையாடுகிறார். சுழற்பந்து வீச்சையும் சாதாரணமாக எதிர் கொள்கிறார். அழுத்தமான சூழ்நிலையிலும் எளிதாக விளையாடுகிறார். அவர் டெஸ்ட்டில் 40-க்கும் மேற்பட்ட சதங்களை விளாச போகிறார். மேலும் பல சாதனைகளை படைக்க உள்ளார்.

இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com