

கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழக்கும்போது சண்டை ஏற்பட்டது.
இந்தியா- இலங்கை இடையில் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால், அசிதா பெரனாண்டஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், பெர்னாண்டோ சக வீரரகளுடன் வெறுப்பேற்றும் வகையில் விக்கெட் வீழந்ததை கொண்டாடினார். இதனால் ஜெய்ஸ்வால்ஸ் பெர்னாண்டோவை நோக்கி சண்டையிடுவது போல் சென்று மோதிக் கொண்டார்.
இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்கள் பெர்னாண்டோவை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக ஐசிசி விசாரணை மேற்கொண்டு இருவருக்கும் போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்தது. பின்னர், போட்டிக்கு தடைவிதிப்பதற்கான புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டது.