

நியூசிலாந்து உடனான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷன் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இஷான் கிஷனின் காயம் காரணமாக பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டு, திலக் வர்மா மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். இஷான் பின்னர் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்து 3 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷன் நியூசிலாந்து உடனான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டி20 போட்டியின்போது லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இஷான் கிஷன் விலகியுள்ளதால் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இரண்டாவது டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது.