4வது ஒருநாள் போட்டியில் அசத்தல் பந்துவீச்சு: நமீபியாவை வீழ்த்தியது அயர்லாந்து

அயர்லாந்தின் ஜெய் மூந்த்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
jai moondra
Published on: 
Summary

நமீபியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்தும், அடுத்த இரு போட்டிகளில் நமீபியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி விண்டோக்கில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நமீபியா பவுலிங் தேர்வு செய்தது.

டிம் டெக்டார், கர்டிஸ் காம்பர் அரை சதம்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிம் டெக்டார் 73 ரன்னும், கர்டிஸ் காம்பர் 66 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நமீபியா சார்பில் ஜே.ஜே.ஸ்மிட் 4 விக்கெட் வீழ்த்தினர்.

ஜெய் மூந்த்ரா 6 விக்கெட்

இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

8வது விக்கெட்டுக்கு இணைந்த ஜேன் கிரீன் - ரூபன் டிரம்பல்மான் ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், நமீபியா அணி 41 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 130 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரில் 2-2 என சமனிலை வகிக்கிறது.

அயர்லாந்து சார்பில் ஜெய் மூந்த்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி வரும் 1-ம் தேதி நடைபெறுகிறது.

X