2வது டி20 போட்டி - 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அயர்லாந்து

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 122 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய அயர்லாந்து 125 ரன்கள் எடுத்து வென்றது.
46 ரன்கள் எடுத்த பால்பரின்
46 ரன்கள் எடுத்த பால்பரின்
Published on

பெல்பாஸ்ட்:

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தினர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஷ்மதுல்லா ஷஹிதி 36 ரன்கள் எடுத்தார்.

அயர்லாந்து சார்பில் ஜோஷ்வா லிட்டில், மார்க் அடைர், காம்பெர் மற்றும் டெலானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. பால்பரின் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் அவுட்டானார். டக்கர் 27 ரன் எடுத்தார்.

இறுதியில், அயர்லாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாக்ரெல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் அயர்லாந்து அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com