ஐபிஎல் டி20 போட்டி- லக்னோவிடம் வீழ்ந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் டி20 போட்டி- லக்னோவிடம் வீழ்ந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
Published on

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 21 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 29 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களும், ஜோஸ் பட்லர் 40 ரன்களும், தேவ்தட் படிக்கல் 26 ரன்களும், ரியான் பராங் 15 ரன்களும், அஷ்வின் 3 ரன்களும், சஞ்சு சான்சன் 2 ரன்களும் எடுத்தனர். அஷ்வின் மற்றும் ரியான் பராங் ஆகியோர் ஆட்டத்தை இழக்கவில்லை.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com