ஐ.பி.எல் டி20- ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி

லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது.அதிகபட்சமாக அரை சதம் அடித்த ரிங்கு சிங் 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார்.
ஐ.பி.எல் டி20- ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி
Published on

16-வது ஐபிஎல் தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் லக்னோ அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியினரின் அபார பந்துவீச்சில் லக்னோ அணி சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 73 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனியுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்த நிலையில் பதோனி 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது. கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக அரை சதம் அடித்த ரிங்கு சிங் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார்.

தொடர்ந்து, ஜாசன் ராய் 45 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ரன்களும், நிதிஷ் ராணா 8 ரன்களும், ஆண்டிரே ரூசல் 7 ரன்களும், ஷார்துல் தகூர் 3 ரன்களும், சுனில் நரைன் ஒரு ரன்னும் எடுத்தனர். இறுதியாக களமிறங்கிய வைபவ் அரோரா ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிப் பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com