கீழ்வேளூர் பா.ம.க. வேட்பாளர் மாற்றம்- ஜி.கே.மணி அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதியில் வடிவேல் ராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிகே மணி
ஜிகே மணி
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத.முகுந்தன் மாற்றப்படுகிறார்.

அவருக்கு பதிலாக கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com