கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார்.
புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி
புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி
Published on

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி 51304 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் சீத்தாராமன் 45277 வாக்குகள் பெற்று 2-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யராணி 6170 வாக்குகள் பெற்று 3-வது இடத்திலும், நோட்டா அந்த தொகுதியில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து தேமுதிக 1047 வாக்குகளும் இந்திய ஜனநாயக கட்சி 362 வாக்குகளும் பெற்றுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com