கிளாசன் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது.
கிளாசன் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி
Published on

புதுடெல்லி:

ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.

மணீஷ் பாண்டே 23 பந்தில் 37 ரன்னும், சுனில் நரைன் 16 பந்தில் 31 ரன்னும் எடுத்தார். ஹர்ஷித் ராணா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com