வெற்றிக் கோப்பையுடன் மெஸ்ஸியை நினைவூட்டிய ஸ்ரேயாஸ்.. வைரலாகும் வீடியோ

BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர்.மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.
வெற்றிக் கோப்பையுடன் மெஸ்ஸியை நினைவூட்டிய ஸ்ரேயாஸ்..  வைரலாகும் வீடியோ
Published on

ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கடுமையாகப் போராடி பைனல்ஸ் வரை வந்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றிக் கோப்பைக்கான வேட்டையில் ஆக்ரோஷமாக விளையாடின.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வெனறு பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது.

வெற்றிக்குப் பிறகு, BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர். கோப்பையை பெற்ற ஸ்ரேயாஸ் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றபோது செய்ததைப் போல பாவனை செய்து தனது அணியுடன் கோப்பையை உயர்த்திக்காட்டினார்.

கடந்த 2022 டிசம்பரில் கத்தாரில் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான அசுர வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி வெற்றிக்களிப்பில் நடந்து வந்த தருணத்தை ஐபில் கோப்பையை பெற்றுக்கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் உருவாக்கியது அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com