மகளிர் பிரீமியர் லீக்: ஆட்ட நாயகி விருது வென்ற ஹர்மன்பிரீத், தொடர் நாயகி விருது வென்ற நாட் சீவர் பிரண்ட்

ஆட்ட நாயகி விருதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வென்றார். 523 ரன்கள் எடுத்த நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.
மகளிர் பிரீமியர் லீக்: ஆட்ட நாயகி விருது வென்ற ஹர்மன்பிரீத், தொடர் நாயகி விருது வென்ற நாட் சீவர் பிரண்ட்
Published on

மும்பை:

மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்தார்.

தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.

இந்நிலையில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த மும்பை அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

மேலும், நாட் சிவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com