100 நாட் அவுட்... ஐபிஎல் வரலாற்றில் தோனி படைத்த புதிய சாதனை

இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.
100 நாட் அவுட்... ஐபிஎல் வரலாற்றில் தோனி படைத்த புதிய சாதனை
Published on

ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

இப்போட்டியில் இறுதி ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கு உதவிய கேப்டன் எம்.எஸ். தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 100 முறை அவுட் ஆகாமல் இருந்து சி.எஸ்.கே கேப்டன் தோனி போட்டியை முடித்துக் கொடுத்துள்ளார். இதில் சேஸிங்கில் 42 முறையும் வெற்றி பெட்ரா போட்டிகளில் 60 முறையும் தோனி நாட் அவுட்டாக இருந்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com