விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டோனி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். #VIVOIPL #IPL2018 #MSDhoni
விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி
Published on

புனே:

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

இப்போட்டியில், பஞ்சாப் அணி பேட்டிங்கின் போது சென்னை அணியின் விக்கெட் கீப்பர் டோனி மூன்று கேட்சுகள் பிடித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார். டோனி இதுவரை 216 விக்கெட்கள் விழ காரணமாக இருந்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கம்ரான் அக்மல் 215 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா 202 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும் டி20 போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார். டி20 போட்டிகளில் டோனி இதுவரை 144 கேட்சுகள் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சங்ககாரா (142), தினேஷ் கார்த்திக் (139) ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். #VIVOIPL #IPL2018 #MSDhoni

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com