

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 44-வது லீக் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, மும்பை அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 7-வது இடத்திலும், மும்பை அணி 9-வது இடத்திலும் நீடிக்கிறது.