மேட்டூர் தொகுதி கண்ணோட்டம்

அதிமுக கூட்டணியில் பா.ம.க., திமுக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தும் மேட்டூர் தொகுதி கண்ணோட்டம்.
மேட்டூர் தொகுதி
மேட்டூர் தொகுதி
Published on

பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 2.50,000

2. அசையும் சொத்து மதிப்பு- ரூ. 36,71,728

3. அசையா சொத்து மதிப்பு- ரூ. 1,75,00,000

திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாள் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 50,000

2. அசையும் சொத்து மதிப்பு- ரூ. 28,87,446.95

3. அசையா சொத்து மதிப்பு-  ரூ. 3,82,78,428

தேர்தல் வெற்றி

1957 கே. எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் காங்கிரஸ்

1962 கே. எஸ். அர்த்தனாரீசுவர  கவுண்டர் காங்கிரஸ்

1967 எம். சுரேந்திரன் பிரஜா சோசலிச கட்சி

1971 எம். சுரேந்திரன் பிரஜா சோசலிச கட்சி

1977 கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் அதிமுக

1980 கே. பி. நாச்சிமுத்து கவுண்டர்  அதிமுக

1984 கே. பி. நாச்சிமுத்து அதிமுக

1989 எம். சீரங்கன்  இபொக(மார்க்சியம்)

1991 எஸ். சுந்தராம்பாள் அதிமுக

1996 பி. கோபால் திமுக

2001 எஸ். சுந்தராம்பாள் அதிமுக

2006 ஜி. கே. மணி பாமக

2011 பார்த்திபன் தேமுதிக

2016 செம்மலை அதிமுக

2016 தேர்தல்

செம்மலை அதிமுக 72,751 

பார்த்திபன் திமுக 66,469 

ஜி.கே.மணி பாமக 49,939

தமிழகத்தின் மிகப்பெரிய, முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை இந்த தொகுதியில் தான் உள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையம், மால்கோ, கெம்பிளாஸ்ட், ஜேஎஸ்டபிள்யூ போன்ற தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன, கர்நாடகா மாநிலத்தை ஒரு பக்க எல்லையாகக் கொண்ட தொகுதி. விவசாயம், மீன்பிடி தொழில் பிரதானமானது. வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி.

மேட்டூர் வட்டத்துக்கு உட்பட்ட காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி தின்னப்பட்டி, கோனூர், கூணான்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குந்தம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி மற்றும் குலநாயக்கன்பட்டி கிராமங்கள் தொகுதியில் அடங்கியுள்ளன. மேலும், மேட்டூர் நகராட்சி,மேச்சேரி, கொளத்தூர், வீரக்கல்புதூர், பி.என்.பட்டி ஆகிய பேரூராட்சிகளைக் கொண்டுள்ளது.

எஸ். சதாசிவம், சீனிவாச பெருமாள்

மேட்டூர் அணை தொகுதியில் இருந்தும், கொளத்தூர் உள்பட முக்கிய பகுதிகளுக்கு காவிரி நீர் பாசனத்துக்கு கிடைக்கவில்லை என்பது நீண்ட கால பிரச்சினை. மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருந்தும் சேலம்- மேட்டூர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் குறுகியதாக உள்ளது.

மேட்டூரை சுற்றுலாத் தலமாக்க போதுமான நடவடிக்கைகள் இல்லை என்பது மக்களின் குறை. கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் அதிமுக., 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பிரஜா சோசலிச கட்சி 2 முறையும், இந்திய பொதுவுடமைக் கட்சி, திமுக, பாமக., தேமுதிக., ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சில தொகுதியில் வெற்றிபெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்கிற சென்டிமென்ட் உண்டு. அத்தகைய சென்டிமென்ட் தொகுதிகளில் மேட்டூரும் ஒன்று. 2016 வரை  நடந்த 12 தேர்தல்களில் 7 தேர்தல்களில் நேரடியாக, ஆட்சியைப் பிடித்த கட்சிகளும் ஐந்து முறை ஆட்சியைப் பிடித்த கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த தொகுதியில் ஆண்கள்- 1,43,362 பேர், பெண்கள்- 1,38,021 பேர், இதரர்- 4 பேர் என மொத்தம் 2,81,387 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் எஸ். சதாசிவம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் சீனிவாச பெருமாள், தேமுதிக சார்பில் ரமேஷ் அரவிந்த் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com