

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப் பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது.
இது தொடர்பாக பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, " சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கேகேஆர் அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்" என்று தெரிவித்தார்.
முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.
#WATCH | Guwahati | BCCI secretary Devajit Saikia says, "Due to the recent developments that are going on all across, BCCI has instructed the franchise KKR to release one of their players, Mustafizur Rahman of Bangladesh, from their squad and BCCI has also said that if they ask… pic.twitter.com/53oxuRcmZp