எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கமுடியுமா! - கருண் நாயரின் பழைய எக்ஸ் பதிவு இணையத்தில் வைரல்

அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் 303 ரன்கள் குவித்தார்.
எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கமுடியுமா! - கருண் நாயரின் பழைய எக்ஸ் பதிவு இணையத்தில் வைரல்
Published on

ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய கருண் நாயரின் பழைய எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அந்த பதிவில், "டியர் கிரிக்கெட், எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கமுடியுமா?" என்று பதிவிட்டிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் குவித்த கருண் நாயருக்கு அதற்கு பெரிய அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதன்பின்பு உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் மீண்டும் ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com