IPL 2026 | ராஜஸ்தான் ராயல்ஸ் 159/6

ஜடேஜா 29 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
IPL 2026 | ராஜஸ்தான் ராயல்ஸ் 159/6

ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ 6 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்தபோட்டியில் விளையாடி அதே வீரர்களுடன் களம் இறங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

1. ஜெய்ஸ்வால், 2. சூர்யவன்ஷி, 3 துருவ் ஜூரல், 4. ரியான் பராக் (கேப்டன்), 5. ஷிம்ரோன் ஹெட்மையர், 6. ஃபெரேரா, 7. ஜடேஜா, 8. ஆர்ச்சர், 9. ரவி பிஷ்னோய், 10. பர்கர், 11. பிரிஜேஷ் சர்மா.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி

1. மிட்செல் மார்ஷ், 2. மார்க்கிராம், 3. ரிஷப் பண்ட் (கேப்டன்), 4. ஆயுஷ் படோனி, 5. நிக்கோலஸ் பூரன், 6. முகுல் சவுத்ரி, 7. திக்வேஷ் ரதி, 8. முகமது ஷமி, 9. பிரின்ஸ் யாதவ், 10. மயங்க் யாதவ், 11. மோஷின் கான்

ஒரே ஓவரில் 2 விக்கெட்

முகமது ஷமி 3-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஜுரல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

சூர்யவன்ஷி ஏமாற்றம்

சூர்யவன்ஷி 4-வது ஓவரில் முதல் 5 பந்துகளில் ரன்ஏதும் எடுக்காமல் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 8 ரன்கள் மட்டுமே அடித்தார்.

பவர்பிளே

ராஜஸ்தான் ராயல்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.

50 ரன்களை கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ்

7-வது ஓவரின் கடைசி பந்தை ரியான் பராக் சிக்சருக்கு தூக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்களை கடந்தது. 54/3 (7 ஓவர்)

ரியான் பராக் அவுட்

பிரின்ஸ் யாதவ் பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்துள்ளது.

ஹெட்மையர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. ஜடோஜா, பெரேரா களத்தில் உள்ளனர்.

14.3 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 100 ரன்களை தொட்டது.

ஷுபம் துபே 11 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முகமது சமி, பிரின்ஸ் யாதவ், மோஷின் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com