

ஐபிஎல் 2026 சீசனில் 7-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே-வுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 5 ரன்கள் கிடைத்தன.
2-வது ஓவரை பார்ட்லெட் வீசினார். முதல் பந்தை கெய்க்வாட் பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். முதல் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணிக்கெதிராக 6 ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 5-வது ஓவரில் ஒரு சிக்ஸ், 6-வது ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் சிஎஸ்கே பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்தது.
யான்சன் வீசிய 6-வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். 8-வது ஓவரை சாஹல் சிறப்பாக வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 9-வது ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 29 பந்தில் அரைசதம் விளாசினார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்துள்ளது.