மரங்கள் நடும் கொல்கத்தா அணி... CSK அணியை கலாய்த்து KKR வெளியிட்ட புகைப்படம் வைரல்

தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. அணி 61 Dot Ball பந்துகளை ஆடியது
மரங்கள் நடும் கொல்கத்தா அணி... CSK அணியை கலாய்த்து KKR வெளியிட்ட புகைப்படம் வைரல்
Published on

நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில் 20 ஓவர்கள் விளையாடிய சி.எஸ்.கே. அணி 61 Dot Ball பந்துகளை ஆடியது. இதன்மூலம் 25,500 மரங்களை நட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது.

இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக விரைவில் மாறிவிடும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 61 Dot Ball பந்துகளை வீசியதை குறிக்கும் விதமாக கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் மரம் நடுவது போன்ற புகைப்படத்தை அந்த அணி வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com