ஐபிஎல் தொடரில் மிகவும் குறைந்த வயதில் களமிறங்கி முஜீப் உர் ரஹ்மான் சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிகவும் குறைந்த வயதில் களமிறங்கி முஜீப் உர் ரஹ்மான் சாதனை
Published on

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முஜீப் உர் ரஹ்மான் இடம் பிடித்திருந்தார். நான்கு ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

இந்த போட்டியில் விளையாடிய முஜீப் உர் ரஹ்மானுக்கு 17 வயது 11 நாள். இதன்மூலம் மில்லேனியம் வருடத்திற்குப் பிறகு பிறந்து குறைந்த வயதில் அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளனார்.

X

Maalai Malar
www.maalaimalar.com