முதல் ஆட்டத்தில் தோல்வி- தொடரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனை

ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பதில் மோசமான சாதனையை தவிர்க்க முடியாமல் தவித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MI
முதல் ஆட்டத்தில் தோல்வி- தொடரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனை
Published on

ஐபிஎல் 11-வது சீசன் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 1 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும், வெயின் பிராவோ அதை தட்டிப்பறித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் தோல்வியடைவது புதிதல்ல. தொடக்கத்தில் திணறி, அதன்பின் வாழ்வா? சாவா? என்ற நிலை வரும்போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

கடந்த 2013 சீசனில் இருந்து தொடர்ந்து 5 முறை முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ், இந்த முறையாவது வெற்றியோடு தொடக்க வேண்டும் என்று விரும்பியது. ஆனால், அவர்களின் மோசமான சாதனையை நீடித்துக் கொண்டே செல்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com