ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2018 #MIvSRH
ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை இந்தியன்ஸ்?
Published on

8 அணிகளுக்கு இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை இந்தியன்ஸ் தான் விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் தோல்வியை தழுவி உள்ளது. இதனால் வரும் போட்டிகளில் அனைத்தும் அந்த அணிக்கு வாழ்வா? சாவா? போன்றதுதான். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கும்.

அத்துடன் சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப மும்பை அணி முயற்சிக்கும்.

சன்ரைசர்ஸ் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெறகு தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முயற்சிக்கும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com