

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரைன், 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.
அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நேரத்தில் ஷுப்மான் கில் 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.