

ஆட்டநாயகன் விருது பெற்ற ஹர்திக் பாண்டியா, பேட்டிங் பயிற்சியை நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்தது குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘நான் எதையும் வித்தியாசமாக செய்து கொண்டிருக்கவில்லை. என்றாவது ஒருநாள் இதுபோன்று அமையும். இன்று அப்படி ஒரு ஆட்டம் என்னிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. நான் பேட்டிங் பயிற்சியை நிறுத்தி விட்டேன்.