ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை அணியின் வெற்றிக்கு 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவை

மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை அணியின் வெற்றிக்கு 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவை
Published on

மும்பை:

11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 

இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார், வாட்சனுக்கு மெய்டனாக வீசினார். 2-வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மீண்டும் 3-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

4-வது ஓவரை சந்தீப் சர்மா வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் டுபிளெசிஸ் கேட்சாகி வெளியேறினார். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். 5-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 6-வது ஓவர் சந்தீப் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.

7-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணி அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்தது. 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com