

புனேயில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஷேன் வாட்சன் (78) - டு பிளிசிஸ் (33) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. டு பிளிசிஸ் அவுட்டானதும், சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார்.
இவர் 2 பந்துகளை சந்தித்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் க்ளீன் போல்டானார். இந்த அவுட் மூலம் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் வரலாற்றில் 50-வது முறையாக சுழற்பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.
இதில் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின்னில் தலா 19 முறையும், ஸ்லோ லெஃப்ட் ஆஃர்ம் பந்து வீச்சில் 11 முறையும், சைனமேன் பந்தில் ஒரு முறையும் ஆட்டமிழந்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இதுவரை 168 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 33 அரைசதங்களுடன் 4745 ரன்கள் குவித்துள்ளார். இதில் 26 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.