ஐபிஎல் 2018- நான்கு மாற்றங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்

புனேயில் 8 மணிக்கு தொடங்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. #IPL2018 #CSKvDD
ஐபிஎல் 2018- நான்கு மாற்றங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்
Published on

புனேயில் 8 மணிக்கு தொடங்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. #IPL2018 #CSKvDD

ஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சரியாக 7.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டோனி டாஸ் சுண்ட ஷ்ரேயாஸ் அய்யர் ‘ஹெட்’ என அழைத்தார். ‘ஹெட்’ விழ அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளிசிஸ், கரண் சர்மா, லுங்கி நிகிடி, ஆசிப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. டு பிளிசிஸ், 5. டோனி, 6. ஜடேஜா, 7. வெயின் பிராவோ, 8. கரண் சர்மா, 9. ஹர்பஜன் சிங், 10. லுங்கி நிகிடி, 11. கேஎம் ஆசிப்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. பிரித்வி ஷா, 2. கொலின் முன்றோ, 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. கிளென் மேக்ஸ்வெல், 6. விஜய் சங்கர், 7. ராகுல் டெவாட்டியா, 8. லியாம் பிளங்கெட், 9. அமித் மிஸ்ரா, 10. அவேஷ் கான், 11. டிரென்ட் போல்ட்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com