லக்னோ அணியுடன் நாளை இணைகிறார் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்?

லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பெற்றிருந்தார். லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
லக்னோ அணியுடன் நாளை இணைகிறார் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்?
Published on: 

ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.

இந்நிலையில் லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் காயம் காரணமாக அணியுடன் இடம்பெறவில்லை. அவர் பெங்களுருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மயங்க் நாளை லக்னோ அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இவர் அணியின் இடம்பெற்றால், ஆவேஸ் கான் நீக்கப்படலாம்.  

X

Maalai Malar
www.maalaimalar.com