ஐ.பி.எல். புள்ளிப்பட்டியல்: முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் அணி.
ஐ.பி.எல். புள்ளிப்பட்டியல்: முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்
Published on

மும்பை:

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56-வது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 155 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

இதையடுத்து, குஜராத் வெற்றிபெற ஒரு ஓவரில் 15 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் கடைசி ஓவரில் 15 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

2வது இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் பஞ்சாப் கிங்சும், 4வது இடத்தை மும்பை இந்தியன்சும், 5வது இடத்தை டெல்லியும், 6வது இடத்தை கொல்கத்தாவும், 7வது இடத்தை லக்னோவும் பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com