ஐபிஎல் 2025: மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத்

முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐபிஎல் 2025: மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத்
Published on

அகமதாபாத்:

நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன்னும், சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 48 ரன்னும், திலக் வர்மா 39 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியின் 2வது தோல்வி இதுவாகும்.

குஜராத் அணி சார்பில் சிராஜ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com