டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் - சுப்மன் கில் புதிய சாதனை

டெல்லிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 93 ரன்கள் அடித்தார்.143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் - சுப்மன் கில் புதிய சாதனை
Published on

ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். .

இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்து உள்ளார்.

143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார். சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com