

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட் கம்மிஸ்ஸ் தலைமையில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம் ஜம்பாவிற்கு பதிலாக 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ஸ்மரண் ரவிச்சந்திரன் என்பவரை அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்மரண் ரவிச்சந்திரன் கர்நாடகா அணிக்காக இதுவரை 7 முதல்தர போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 500 ரன்கள் குவித்துள்ளார். அதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதே போன்று லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 72 ரன்கள் சராசரியுடனும் 2 சதங்களுடனும் 433 ரன்களை குவித்துள்ளார்.
அதேபோன்று 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.