2027 ஐ.பி.எல். சீசன் மினி ஏலத்திற்கான தேதி அறிவிப்பு..!

வீரர்களை தக்க வைத்துக் கொள்ள நவம்பர் 15-ந்தேதி இறுதிக்கெடு ஆகும்.
ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலம்
Published on: 

ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன்னதாக மினி ஏலம் நடைபெறும். அடுத்த வருடம் (2027) நடைபெறும் ஐ.பி.எல். சீசனுக்கு மினி ஏலம் கோவாவில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 15-ந்தேதி ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களை தக்கவைத்துக் கொள்வது தொடர்பான பணிகளை நவம்பர் 15-ந்தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு அணிகள் Trade-ல் ஈடுபட முடியாது. ஏலத்தில்தான் வீரர்களை தேர்வு செய்ய முடியும்.

Trade செய்யப்பட்ட ரிஷப் பண்ட்

கடந்த ஜூன் மாதம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு Trade செய்தது. அதற்குப் பதிலாக குல்தீப் யாதவை பெற்றுக் கொண்டது. சமீபத்தில் டெல்லி அணி நடராஜனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கொடுத்துவிட்டது, லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரியை பெற்றுக் கொண்டது.

2027 சீசனுக்கு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுவாக மார்ச் இறுதியில் தொடங்கி, மே கடைசியில் முடிவடையும்.

ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு ஒருமுறை மெகா ஏலம் நடைபெறும். அந்த வகையில் அடுத்த வருடம் (2027) மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த பருவத்தில் கடைசி மினி ஏலம் இதுவாகும். மெகா ஏலத்திற்கு முன்னதாக தொலைக்காட்சி உரிமம் போன்றவற்றை பிசிசிஐ உறுதி செய்யும்.

Trade முறை

ஐபிஎல் விதிப்படி தற்போது இரண்டு முறை Trade நடைபெற்று வருகிறது. ஒரு சீசன் முடிந்து ஒரு மாதம் கடந்த பின்னர் Trade தொடங்கும். மினி ஏலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் Trade செய்யமுடியாது. அதன்பின் மினி ஏலம் முடிவடைந்த பின்னர் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன் வரை Trade செய்து கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com