IPL 2026 | பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி... சி.எஸ்.கே.வை முடித்துவிட்ட பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.
IPL 2026 | பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி... சி.எஸ்.கே.வை முடித்துவிட்ட பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

2026 ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 03) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் களமிறங்கின. சென்னையின் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரரான சஞ்சு சாம்சன் 7 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில் 28 ரன்கள் (2 பவுண்டரிகள்) அடித்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளில் 73 ரன்கள் (6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) விளாசினார்.

இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷிவம் துபே தன் பங்கிற்கு 27 பந்துகளில் 45 ரன்களை (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினார். கடைசியில் சர்ஃபராஸ் கான் 12 பந்துகளில் 32 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்Kள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது.

210 ரன்களை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான ப்ரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 39 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) மற்றும் 43 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கூப்பர் கனொலி 22 பந்துகளில் 36 ரன்கள் (6 பவுண்டரிகள்) எடுத்தார்.

போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. பஞ்சாப் சார்பில் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களையும் குவித்து அந்த அணி வெற்றிக்கு வித்திட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com