IPL 2026 | முதல் பந்திலேயே விக்கெட்... மாஸ் சம்பவம் செய்த முகமது ஷமி

டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
IPL 2026 | முதல் பந்திலேயே விக்கெட்... மாஸ் சம்பவம் செய்த முகமது ஷமி
Published on

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் முகமது ஷமி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய முகமது ஷமியை லக்னோ அணி ஏலத்தில் தங்களது அணிக்கு விளையாட ஏலம் எடுத்தது.

அதன்படி நடப்பு ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணி விளையாடிய முதல் போட்டியிலேயே முகமது ஷமி ஆடும் லெவனில் இடம்பெற்று இருந்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி அசத்தினார். நேற்று (ஏப்ரல் 1) நடந்த இந்தப் போட்டியில் ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை கே.எல். ராகுல் எதிர்கொண்டார்.

எனினும், கே.எல். ராகுல் அடித்த ஷாட்டை மோசின் கான் கேட்ச் ஆக மாற்றினார். இதனால் கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்கு நடையை கட்டினார். இதன் மூலம் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் முகமது ஷமி.

ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை முதல் பந்திலேயே விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்திற்கு முன்னேறினார், இதுவரை தான் விளையாடிய ஐ.பி.எல். போட்டிகளில் முகமது சமி 5 முறை முதல் பந்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு எளிய இலக்கை துரத்திய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி நடப்பு ஐ.பி.ல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com