விசுவாசம்.. ஆர்சிபி ரசிகர்கள் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி 379 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது.
விசுவாசம்.. ஆர்சிபி ரசிகர்கள் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி
Published on

ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.

பெங்களூரு அணி இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான். அளவுகடந்த ஆதரவு, அர்ப்பணிப்பு, அன்பிற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். எங்கள் ரசிகர்கள் குடும்பத்தின் அங்கமாக உள்ளனர்.

இவ்வாறு கோலி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com