கைகளை சுழற்ற தெரிந்தா போதும்.. யாரையும் மேட்ச் வின்னர் ஆக்கிடுவார்.. டோனிக்கு ஸ்ரீசாந்த் புகழாரம்

ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும். அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி.
கைகளை சுழற்ற தெரிந்தா போதும்.. யாரையும் மேட்ச் வின்னர் ஆக்கிடுவார்.. டோனிக்கு ஸ்ரீசாந்த் புகழாரம்
Published on

ஐபிஎல் 2024 தொடர் நாளை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் கேப்டன் டோனி ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவி வருகிறது. இதனால் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் டோனி குறித்தும் அவரது கேப்டன்ஷிப் குறித்தும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் டோனியிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும். அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி. அவரிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com