பிரசித் கிருஷ்ணா- முஜீப் உர் ரஹ்மானுக்கு மாற்று வீரரை அறிவித்த ஆர்ஆர்- கேகேஆர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா- முஜீப் உர் ரஹ்மானுக்கு மாற்று வீரரை அறிவித்த ஆர்ஆர்- கேகேஆர்
Published on

ஜெய்ப்பூர்:

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

ராஜஸ்தான் அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் கேஷவ் மகராஜ் இணைந்துள்ள மேலும்

இதேபோல கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அல்லா கசன்ஃபரை கொல்கத்தா அணி நியமித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com