ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு: தவான் இல்லாமல் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் எடுத்துள்ளார்.ராஜஸ்தான் ஐந்தில் நான்கில் வெற்றி பெற்று 5-வது வெற்றியை பதிவு செய்யும் வகையில் களம் காண்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு: தவான் இல்லாமல் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ்
Published on

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் இன்று சண்டிகரில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணியில் இன்று அந்த அணியின் கேப்டன் தவான் களம் இறங்கவில்லை. அதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com