மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்த டூ பிளெசிஸ், மேக்ஸ்வெல்.. ஆர்சிபி 199 ரன்கள் குவிப்பு

மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளெசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.
மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்த டூ பிளெசிஸ், மேக்ஸ்வெல்.. ஆர்சிபி 199 ரன்கள் குவிப்பு
Published on

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அனுஜ் ராவத் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் கேப்டன் டூ பிளெசிஸ்-கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளெசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் 120 ரன்கள் சேர்த்தனர்.

இதேபோல் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் குவிக்க, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது.

மும்பை அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரண்டாப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேமரான் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com