மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்தியா
Published on

கொழும்பு:

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

இலங்கையின் கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்லின் தியோல் 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்னும், பிரதிகா ராவல் 31 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 35 ரன்கள் அடித்து அசத்தினார்.

பாகிஸ்தான் சார்பில் டயானா பெய்க் 4 விக்கெட்டும், பாத்திமா சனா, சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் சிட்ரா அமின் தனி ஆளாகப் போராடினார். அரை சதம் கடந்த அவர் 81 ரன்னில் அவுட்டானார். நடாலியா பர்வேஸ் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com