5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் தேர்வு: தேவ்தத் படிக்கல் அறிமுகம்

இந்திய அணியில் பும்ரா, தேவ்தத் படிக்கல் இடம் பிடித்துள்ளனர்.ஆகாஷ் தீப், ரஜத் படிதார் நீக்கப்பட்டுள்ளனர்.
5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் தேர்வு: தேவ்தத் படிக்கல் அறிமுகம்
Published on

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்குகிறது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ராபின்சன் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

 இந்திய அணியில் பும்ரா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரஜத் படிதார் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com