ஆசிய விளையாட்டு: வெற்றியுடன் தொடங்கியது இந்திய மகளிர் ஹாக்கி: 19 கோல் போட்டு அபாரம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன.
team india
Published on
Summary

ஆசிய விளையாட்டின் பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை 19-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஆக்கி அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஜப்பான், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

ஏ பிரிவில் சீனா, மலேசியா, தென் கொரியா, சீன தைபே, கஜகஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இந்தியா கோல் மழை

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை இன்று எதிர்கொண் டது. இதில் இந்தியா கோல் மழை பொழிந்தது. 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது.

தீபிகா 8 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அவர் 8, 22, 26, 33, 37, 38, 41, 54 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தார். இஷிகா 3 கோலும், நேகா 2 கோலும் பதிவு செய்தனர்.

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சீனா 13-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

ஆண்கள் அணி

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென் கொரியா, இலங்கை, வங்கதேசம், ஜப்பான், இந்தோனேசியா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

பி பிரிவில் சீனா, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவை இன்று எதிர்கொள்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com